வால்நட்சத்திரம் ஒன்றின்மீது இறங்கிய முதலாவது ஆய்வுக்கலனான ஃபைலே, 7 மாதகால உறக்க நிலைக்குப் பின்னர் இப்போது மீண்டும் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
ஃபிலே ஆய்வுக்கலன் நல்லமுறையில் இயங்குவதாக
வும் அடுத்த நடவடிக்கைகளைத் தொடங்கத் தயாராக உள்ளதாகவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுமையம் கூறுகின்றது.
சூரியனுக்கு அருகில் சென்றதும் ஃபைலே விழித்துக் கொண்டுள்ளது. அதன் சோலார் தகடுகள் சக்தியை உருவாக்கத் தொடங்கியுள்ளன.
செங்குத்துப் பாறை ஒன்றின் நிழலில் இறங்கியிறந்த ஃபைலே-யின் இயக்கம் கடந்த நவம்பரில் நின்றுபோனது.
குறித்த வால்நட்சத்திரத்தில் உள்ள பனித் திட்டுகளையும் பாறைகளையும் ஆராய்வதற்காக ஃபைலே வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூமியில் உயிர்வாழ்க்கைக்குத் தேவையான அம்சங்களில் ஒன்றான தண்ணீரைக் கொண்டுவருவதில் வால்நட்சத்திரங்கள் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment