காந்தம், இரும்பு (Iron) தன்மை கொண்ட பொருட்களையும், காந்ததன்மை கொண்ட பொருட்களையும் தன்வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறுவயதில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம்தெரியும்.
காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles) உண்டு – வடதுருவம் (North Pole) மற்றும் தென்துருவம் (South Pole). இயல்பாக ஒரே துருவம் விலகிகொள்ளும் (Like Poles repel each other), எதிர்துருவம் ஒன்றை ஒன்று ஈர்க்கும் (Unlike poles attract each other). எனவே, நாம் ஆய்வுகூடத்தில் (Laboratory) ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம்.
அப்போதுதான் அதன் காந்த ஈர்ப்புதன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால் அதன் காந்த ஈர்ப்புதன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும் காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறுசிறு காந்ததுண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.
பூமி எப்படி காந்தம் ஆனது?
சூரியனின் வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான மின்னோட்டம் கிழக்குதிசையில் இருந்து மேற்குதிசைக்கு சூரியனால் உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும் வடக்குதிசை, நேர் மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம் இருக்கும் தெற்குதிசை, எதிர் மின்னோட்டதையும் (Negative Current) பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரியகாந்தம் ஆகிறது.
மனிதன் எப்படி காந்தப்பொருள் ஆனான்?
மனித உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பலரசாயன பொருட்களை கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்புசத்து உள்ளது. இந்த சிவப்பு அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.
எப்படி தூங்க வேண்டும்?
பூமிக்கு நான்கு துருவங்கள் உண்டு. வடதுருவம் நேர்மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர்மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர்மின்னோட்டம் கொண்டது. கால் எதிர்மின்னோட்டம் கொண்டது.
நாம் தெற்கு பக்கம் தலைவைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர்மின்னோட்டம் மனிதனின் எதிர்மின்னோட்டத்துடனும் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும்போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்து விடும். எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.
No comments:
Post a Comment