என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Monday, 12 October 2015

மழை காலங்களில் மட்டும் தவளைகள் சத்தமிடுவது ஏன்?

மழை காலங்களில் மட்டும் தவளைகள் சத்தமிடுவது ஏன்? 




 தோலை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதற்காக, இண்டு இடுக்குகளில் பதுங்கியிருக்கும் தவளைகள், மழை பெய்ததும் ஈரக் காற்றையும், ஈர மண்ணையும் தாராளமாக அனுபவிக்க வெளியே வருகின்றன. அப்போது தான் நமக்கு தவளை என்ற இனமே இருப்பது நினைவுக்கு வருகிறது.


 தவளைகள், பல காரணங்களுக்காக கத்துகின்றன. எதிரி நடமாட்டத்தை தன் சகாக்களுக்கு தெரிவிக்க, தன் நண்பர்கள் எங்கெங்கு இருக்கின்றனர் என்று தெரிந்து கொள்ள என்று பிழைத்திருத்தலுக்கான, பல காரணங்கள் உண்டு. ஆனால், தவளைகளில் கத்தல்களிலெல்லாம் தலையாயது காதல் கத்தல். 


 மழைக்காலம் தவளைகளின் இனப் பெருக்க காலம்.
ஆண் தவளைகள், பெண் தவளையின் சம்மதத்தைப் பெற கத்துகின்றன. எந்த ஆண் தவளை அதிக சத்தமாகவும் அடர்த்தியாகவும் கத்துகிறதோ அந்த தவளையின் வாரிசை சுமக்க பெண் தவளை முடிவெடுக்கும்.
சில ஆப்ரிக்க தவளை இனங்கள் கத்தினால், ஒரு மைல் துாரத்திற்குக் கூட கேட்குமாம்.

No comments:

Post a Comment