என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Sunday, 27 September 2015

33 ஆண்டுக்கு பிறகு அரிய கிரகணம் வானில் இன்று ரத்த நிலா தோன்றும்.

  33 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அரிய சந்திர கிரகணம் காரணமாக இன்று இரவு வானில் ரத்த நிலா தோன்றும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 




  ஓராண்டில் நான்கைந்து முறை சூப்பர் மூன், அதாவது முழு நிலவு தோன்றுவது வழக்கம். இவ்வாறு முழு நிலவு தோன்றும் இன்றிரவு சந்திர கிரகணமும் நிகழப் போவது அரிய நிகழ்வாகும். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து அது முழுமையாக மறைக்கப்படும். இந்த நிகழ்வே சந்திர கிரகணம். சந்திரன் பொதுவாக சூரியனிடமிருந்தே ஒளியைப் பெறுகிறது என்றாலும், கிரகணம்  நிகழும்போது பூமியின் நிழலில் நிலா இருக்கும்போது, அதன் மேற்பரப்பை சில  ஒளிக்கதிர்கள் தாக்குவதால் அது சிவப்பாக தோன்றுகிறது. 


  இந்த  காரணத்தினாலேதான் சூரியன் மறையும்போது வானமும் அவ்வப்போது, ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறங்களில் காட்சியளிக்கிறது. இவ்வாறு முழு சந்திரகிரகணம் இன்று இரவு தோன்றுவதால் நிலா ரத்த நிறத்தில் சிவப்பாக தோன்றும். 

  1982ம் ஆண்டுக்கு பிறகு சூப்பர் மூன் கிரகணம் நிகழ உள்ளது. கடந்த 115 ஆண்டுகளில் இது 4வது முறையாகும். இந்த கிரகணத்தின்போது வானில் இருக்கும் நிலா வழக்கத்தைவிட 30 சதவீதம் அதிக பிரகாசமாக ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படுவதோடு, 14 சதவீதம் அளவில் பெரியதாகவும் காட்சியளிக்கும் என்று நாசா விஞ்ஞானி சாரா நோபல் தெரிவித்துள்ளார். 


இந்த கிரகணகத்தை வடஅமெரிக்கா மற்றும் உலகின் கிழக்கு பகுதிகளில் நாடுகளில் பார்க்கலாம். இந்தியாவில் தெரியாது. 2033ம் ஆண்டுவரை மீண்டும் இதுபோன்று ரத்த நிலா தோன்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment