எப்போதாவது பல்வலி, எலும்பு முறிவு, வயிற்றுப் புண் என்று எக்ஸ்ரே எடுப்பது பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், நீங்கள் குறிப்பிட்டது போல அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பது உடலுக்கு நல்லதல்ல. உலக அளவில் மருத்துவர்கள் எந்த அளவுக்கு எக்ஸ்ரே எடுக்கலாம் என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அதிக அடர்த்தியுள்ள எக்ஸ் ரே கதிர்கள் அடிக்கடி உடலில் பாய்ந்தால் பலவித பாதிப்புகள் வரும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஹை டோசேஜ் எக்ஸ்ரே உடலில் பாய்ந்தால், பாய்ந்த எக்ஸ்ரேவின் அளவைப் பொறுத்து, ரத்தத்தின் வேதியியல் அமைப்பில் மாற்றம், வாந்தி, சோர்வு, முடி உதிர்தல், வயிற்றுப் போக்கு, குடலின் உட்சுவரில் ரத்தக் கசிவு, மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, உடலின் திசுக்கள், டி.என்.ஏ., அளவில் கூட பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.
மித மிஞ்சிய எக்ஸ்ரே கதிர் தாக்கினால், நாள்பட மரணம் கூட சம்பவிக்கலாம்.எக்ஸ்ரே பல நோய்களை கண்டறிந்து சீக்கிரம் உரிய சிகிச்சை தருவதற்கு உதவியாக இருந்திருக்கிறது. இதனால் எக்ஸ்ரே ஏற்படுத்திய பாதிப்புகளைவிட, அது காப்பாற்றிய நோயாளிகளே அதிகம்.
1895இல் ரோஎன்ட்ஜென் எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்தார். ஆனால் அது எப்படி உருவாகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை. 1896இல் பெக்கிவிரல் யுரேனியம் உப்புகளும் எக்ஸ்-ரே கதிர்கள் போன்ற கதிர்களை வெளியிடுகின்றன என்று கண்டார். மேலும் அவர் இக்கதிர்கள் வெளியிலிருந்து வரும் ஆற்றலால் அல்லாமல் யுரேனியத்திலிருந்தே வருவதை கண்டார்.
மேரி கியூரி ஒரு ஆய்வுக்கட்டுரைக்காக எக்ஸ்-ரே கதிர்களை ஆராய்ந்தார். மேரீ ஒரு புத்தாக்கமான திறமையை பயன்படுத்தி யுரேனியத்தை ஆராய்ந்தார்.
No comments:
Post a Comment