தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா,கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு அரணாக இருக்கும் மேற்கு தொடர்ச்சி
மலையை உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
ஆனைமலை சிகரம் |
ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால்
புதிதாக அறிவிக்கப்பட்ட 8 உலக பாரம்பரிய
மற்றும் கலாச்சார சொத்துக்கள் பட்டியலில் மேற்கு தொடர்ச்சி மலையும்
இடம்பெற்றுள்ளது.
புவியியல் ஆராய்ச்சியாளரும், சுற்றுச்சூழல் நிபுணருமான சந்திரசேகரர் இது பற்றி
தெரிவிக்கையில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் விவசாயிகள் மேற்கு
தொடர்ச்சி மழையின் நீரூற்றால் பயனடைகிறார்கள். இங்குள்ள முள்காடுகள், சோலைகள், புல்வெளிகள் என்பன 7 மாநிலங்களின் காலநிலையை சமன்படுத்துகின்றன. அதாவது
வெப்ப நாட்களில் அதிக வெப்பம் தாககாதவாறும், குளிர் நாட்களில் குளிர் தாககாதவாறும் காலநிலைக்கேற்ப
தட்பவெப்பத்தை சமன் செய்கின்றன.
ஜோக் நீர்வீழ்ச்சி |
பூக்கும் தாவரங்கள், பூக்காத தாவரங்கள் என்று அழகுக்கு குறைவில்லை. இதனால்
தேனீக்களுக்கும் குறைவில்லை. பறக்கும் பட்டாம்பூச்சிகள், சிறிய ரகப் பூச்சிகள்,அரியவகை விலங்கினங்கள், பறவைகள், மரங்கள், தாவரங்கள், மூலிகை செடிகள் அழிந்து போகாமல் பாதுகாக்கப் படவும், வனப்பாய் காட்சியளிக்கும். இவைகள் எல்லாமே போற்றிப்
பாதுகாக்கப் படவேண்டியவை என்பதாலும் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து
கொடுத்திருக்கிறது.
வால் பாறை |
வளர்ச்சிப் பணிக்கு
என இயற்கையை குலைக்கக் கூடாது. இயற்கை அப்படியே பேணிப்பாதுகாக்கப் படவேண்டும்
என்பதால்தான் பாரம்பரிய அந்தஸ்து பொருளாதார ரீதியாகவோ, வளர்ச்சிப் பணிக்காகவோ. சட்டதிட்டங்களை மீறக் கூடாது.
இதனால் கேரள அரசு தொடர்ந்து அறிவித்து வரும் முல்லைப் பெரியாறு அணைக்கு பதில்
புதிய அணைகட்டும் முயற்சிகூட நிறைவேறாது. இது மேற்கு தொடர்ச்சிமலைக்கு கிடைத்த
கவுரவ அந்தஸ்து, என்றார்.
No comments:
Post a Comment