கோலாலம்பூர் - பெய்ஜிங் விமான விபத்தைப் பற்றி இப்போது எல்லோரும்
மறந்துவிட்டோம். விமானம் புறப்பட்டபோது வானிலை நன்றாகவே இருந்தது. கடல் மட்டத்துக்கு மேலே 35,000 அடி உயரத்தில் விமானம்
பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் நெருக்கடி ஏதும் இருந்ததற்கான
அடையாளம் தரைக் கட்டுப்பாட்டு கோபுரங்களுக்கு வரவில்லை.
விமானியும் ரேடியோ மூலம் அவசரச் செய்தி எதையும் சொல்லவில்லை.
விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்கெல்லாம் ரேடாரிலிருந்து விலகிவிட்டது. விமானத்தின் கட்டுமானத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தால் விமானம் அப்படியே இரு துண்டுகளாக உடைந்திருக்கும் என்பது சிலரின்
அனுமானம். விமானிகள் தவறு செய்திருக்கலாம்; பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்றெல்லாம் சொல்வோரும் உண்டு.