6. வாத்தின் “குவாக்” சத்தம் எதிரொலிக்காது! பாடசாலைகளில் எதிரொலி பற்றி கற்பிக்கப்படும் போது வாத்து எழுப்பும் “குவாக்” ஒலி விதிவிலக்காக
எதிரொலிக்காது என கற்பிக்கப்பட்டது. எனினும் அது தவறு என தற்போதைய விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. உண்மையில் “குவாக்” ஒலி எதிரொலிக்கிறது, எனினும் நமது செவிப்பறையும் (அதனுடன் இணைந்த மூளை நரம்புகளும்) அந்த ஒலியின் மீடிறனிற்கு (frequencies) எதிர்வினையை காட்டுவதில்லை! அதனாலேயே வாத்தின் “குவாக்” ஒலி நமது காதுகளுக்கு எதிரொலிக்காததுபோன்று தோன்றுகிறது.
“குவாக்” ஒலிக்கு எதிரொலிப்பு உண்டு என்பது, விசேடமாக தயாரிக்கப்பட்ட எதிரொலி அறை மூலம் நிரூபிக்கப்பட்டது.