என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Monday, 13 April 2015

விரைவில் வேற்று கிரகவாசிகளை பார்க்க முடியும் நாசா விஞ்ஞானிகள் தகவல்

 சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிர்கள் வசித்து வருகின்றன. இதைப்போல வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளனவா? என்ற கேள்வி மனிதர்கள் மட்டுமின்றி விஞ்ஞானிகள் மத்தியிலும் நிலவுகிறது.
 ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வதாக அடிக்கடி செய்திகள் உலா வரும் நிலையில், இது தொடர்பான ஆய்வில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். நீண்டகாலமாக ஆய்வு செய்து வரும் அவர்கள், 2025–ம் ஆண்டுக்குள் வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்க முடியும் என கூறியுள்ளனர்.

   இது தொடர்பாக சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய நாசா தலைமை விஞ்ஞானி எல்லன் ஸ்டோபன் கூறுகையில்.



 அப்படிக் கண்டுபிடிக்கப்படும் உயிரினம் மனிதர்கள் போன்று இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளார். கண்டுபிடிக்கப்படுகின்ற உயிரினம் வெறும் நுண்ணுயிர்களாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.


சூரிய மண்டல்த்தில்  செவ்வாய் கிரகத்திலும் வியாழன், சனி போன்ற கிரகங்களைச் சுற்றுகின்ற துணைக்கோள்களிலும் சூரிய மண்டலத்துக்கு அப்பால் கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கின்ற பூமி மாதிரி கிரகங்களிலும் உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளதா என்று தேடுவதில் நாஸா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உயிரின வாழ்க்கைக்கு தண்ணீர் மிக முக்கியம். அண்மைக் காலமாக நடத்தப்பட்ட ஆராய்வுகளில் வியாழன் கிரகத்தைச் சுற்றும் கானிமீட் எனப்படும் துணைக்கோளில் உறைந்த தரைப் பகுதிக்கு அடியில்  சுமார் 200 கிலோ மீட்டர் ஆழத்தில் கடல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. வியாழனைச் சுற்றும் துணைக்கோள்களில் இன்னொன்றான யூரோப்பாவிலும் சனி கிரகத்தைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளிலும் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதாகக் கருதப்படுகிறது.

செவ்வாய் கிரகத்திலும் சரி, உறைந்து போன பனிக்கட்டி வடிவில்  நிறையவே தண்ணீர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 வானில் எங்கோ இருக்கின்ற நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற கிரகங்கள் மேலும் மேலும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. வியாழன் மாதிரியில் உள்ள பெரிய கிரகங்கள்  நிறையவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமி மாதிரியான கிரகங்கள் தான்  எளிதில் சிக்குவதாக இல்லை.

விண்வெளியில் எங்கு பார்க்க வேண்டும் என்பதை அறிவோம். மேலும் புதிய கிரகங்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதையும் அறிவோம் என்றும்  எல்லன் ஸ்டோபன் கூறினார். விண்வெளியில் இதுவரை உயிரின வாய்ப்புள்ள 5000 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 விண்வெளியில் வேற்றுகிரகவாசிகளை தேடுவது என்பது வைக்கோலில் ஊசியை தேடுவது போல தான். ஆனால் மிக சரியான காந்தத்தை உபயோகபடுத்தினால் ஊசி எளிதாக கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment