என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday, 24 February 2016

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை நடந்தே தங்கம் வென்றவரை தெரியுமா உங்களுக்கு?

 
   
இந்த சுவாரசிய சம்பவம், 1908ம் வருட ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்றது. Wyndham என்கின்ற இவர், முதலில் நன்றாகவே போட்டியில் ஓடிய போதும், இவருடன் ஓடிய ஒருவர் இவரை முழங்கையால் இடித்துத் தள்ளியதால், போட்டி மீளவும் வைக்கப்பட்டது. இவரை முழங்கையால் இடித்தவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். போட்டியில் இருந்த மற்றைய இருவரும் தாங்களாகவே விலகிக் கொண்டனர். இதனால் போட்டி எதுவுமின்றி களமிறங்கிய இவர், நடந்தே தங்கத்தை வென்றார்.


Tuesday, 23 February 2016

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற புகைப்படம்...

  இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?



 கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

Sunday, 21 February 2016

மனிதகுல வரலாற்றையே பதிவு செய்யும் குறுந்தகடு:360 டெராபைட்(360Terabytes)

   பிரிட்டன் விஞ்ஞானிகள் 360 டெராபைட் மின்னணுத் தகவல்களை உள்ளடக்கக்கூடியதும் 1380 கோடி ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கக்கூடியதுமான ஐந்து பரிமாண குறுந்தகடு (5D data storage) ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.