என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Thursday, 11 February 2016

அதிசயம் ஆனால் உண்மை!!!

   தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-



Tuesday, 9 February 2016

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் :இன்னும் விலகாத மர்மம்

  இந்தியாவுக்கு வெளியே மூன்ற பேரைக் கொண்ட (INA) இந்திய தேசிய
ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி.



 1944-ல் இரண்டாம் உலகப்போர் முடியும் தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா –நாகசாகி அணுகுண்டு தாக்குதலதாக்குப்பிடிக்க முடியாமல்
பிரிட்டிஷ் ராணுவத்திடம்சரணடைகிறது ஜப்பான். அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ.தலைமையகமான‘கதே மாளிகை’யில் இருந்தார் நேதாஜி.
அவரை அங்கிருந்து வெளியே அனுப்புகிறார் ஜப்பான் அதிபர்
டோஜோ. இதையடுத்து 18.08.1945 அதிகாலையில், தன்னுடைய
உதவியாளர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் ஜப்பான் தளபதிகள் உள்ளிட்ட
ஒன்பது பேருடன் தனி விமானம் மூலம் சிங்கப்பூரை விட்டுப்
பறக்கிறார் நேதாஜி. எரிபொருள் நிரப்புவதற்காக ஜப்பான் எல்லைக்குள் (இப்போது தாய்வான்) மஞ்சூரியா என்ற இடத்தில் அந்த விமானம் தரையிறக்கப்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இதுவரை புரியாத மர்மம்!

Monday, 8 February 2016

டயானா பற்றிய சில அறிய தகவல்கள் !!

    உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சில அடிப்படை தகுதிகளும் வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத் தகுதி நிறையவே இருந்தது. அதிலும் மறைந்து 19 வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’,என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.