லண்டனைச் சேர்ந்த மார்ட்டின் எனப்படும் பல் மருத்துவரின் கதை மிக சுவாரஸ்யமானது. அவரது மனைவியின் உடல்தான் முதன்முதலில் அறிவியல் அடிப்படையில் எம்பாமிங் செய்யப்பட்டது. பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான அவரது மனைவி, 1735-ல் இறந்துபோனார். அவரது உயிலில், ‘என்னைப் புதைக்காமல் இருக்கும்வரை... எனது சொத்துக்களை, எனது கணவர் அனுபவிக்க உரிமை உண்டு’ என எழுதி இருந்தார். மார்ட்டினுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அப்போது, மற்றொரு பல் மருத்துவ நண்பரான வில்லியம் ஹண்டர் அவருக்கு உதவ முன்வந்தார். அவருடைய உதவியால், தனது மனைவியின் உடலைப் பதப்படுத்தி தன் மருத்துவமனை வாசலில் காட்சிக்கு வைத்தார். அதனால் மனிதருக்கு கிடைத்தது டபுள் தமாக்கா! ஒரு பக்கம், இந்தக் காட்சியைப் பார்க்கவந்த மக்களால்... இவரது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அவரது மனைவியின் உடல், நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்டதால் அவரால் அத்தனை நாட்களும் அவரது சொத்துக்களை ஆண்டு அனுபவிக்க முடிந்தது.
|
வில்லியம் ஹண்டர் |